பொதுமக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க முன் வருகிறதா?- கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய அருண் நேரு எம்.பி.!
நாடாளுமன்றத்தில் பெரம்பலூர் அருண் நேரு எம்.பி., தற்போது கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான மேற்பார்வை அமைப்பின் விவரங்கள் என்ன?, பயன்பாட்டாளர்கள் தங்கள் அறிக்கைகளில் பிழைகளை திருத்த ஒரு நியாயமான வாய்ப்பு வழங்கப்படுகிறதா? பொதுமக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க முன்வருகிறதா? ஆகிய மூன்று கேள்விகளை முன் வைத்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பங்கஜ் சௌதரி, கடன் தகவல் நிறுவனங்கள் 2005ம் ஆண்டின் கடன் தகவல் நிறுவனங்களுக்கான சட்டம், அதன்கீழ் வெளியிடப்பட்ட விதிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் பணியை வழங்குகிறது. ஆர்.பி.ஐ. இதனுடன் தொடர்புடைய கொள்கைகளை உருவாக்கும், வழிகாட்டுதல்களை வெளியிடும், கணக்குப் புத்தகங்களை ஆய்வு செய்யும். விதிகள் பின்பற்றப்படாமல் உள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கச் செய்யும் அதிகாரம் பெற்றுள்ளது.
சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, கடன் பெறுநர் அல்லது கிளையண்ட் தமது கடன் தகவலை திருத்த, புதுப்பிக்க கோரிக்கையை முன் வைக்கலாம். அந்த நிறுவனங்கள் அல்லது கடன் நிறுவனம் அந்த கோரிக்கை மீது 30 நாட்களுக்குள் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், ஆர்.பி.ஐ 2021-ல் வெளியிட்ட “ரிசர்வ் வங்கி ஒருங்கிணைந்த உபரிகர் திட்டம்” என்ற புதிய அமைப்பினை சி.ஐ.சி.களுக்குச் செய்யும் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைத்துள்ளது. இது, சி.ஐ.சி.அல்லது சி.ஐ.இன் தவறான செயல்களில் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டால், அவர்கள் புகார் மனு கொடுக்கலாம். மேலும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அந்த நிறுவனங்கள் சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். அதன்படி அந்த நிறுவனங்கள்
முழுகடன் அறிக்கையை இலவசமாக மின்னணு வடிவில் வழங்க வேண்டும். மேலும் தங்களது கிரிவன்ஸ் ரெட்ரெசல் அமைப்பை வலுப்படுத்த, வாடிக்கையாளர் புகார்களை மறுக்க முன்பே பரிசீலிக்க வேண்டும். 30 நாட்களுக்கு முன்பு தீர்க்கப்படாத புகார்களுக்கு 100 ரூபாய் காலாண்டு இழப்பீடு வழங்க வேண்டும். அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர் புகார்களின் அடிப்படை காரணத்தை 6 மாதத்திற்கு ஒருமுறை பகிர்ந்து சரிபார்க்க வேண்டும். இதுதொடர்பாக கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
Comments are closed.