Rock Fort Times
Online News

பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக துரை வைகோ செயல்படுகிறாரா?* மல்லை சத்யா அதிர்ச்சி குற்றச்சாட்டு…

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதிமுகவில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நாங்கள் காரணமல்ல. ரஷியாவில் சிக்கியுள்ள மருத்துவ மாணவரை மீட்பதற்கான கோரிக்கை கடிதத்தில், எதிர்நிலையில் இருக்கும் பாஜக எம்.பி.க்களிடம் ஏன் கையெழுத்து பெற்றார் என்பதற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ விடையளிக்க வேண்டும். அவர் பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்லாக’ தமிழகத்தில் இருக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். மதிமுக வைகோவின் கட்டுப்பாட்டில் இல்லை. கருணாநிதியின் இறுதி தருவாயில், காலமெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று அளித்த உத்தரவாதம் உண்மையானால், பாஜகவிடம் கையெழுத்து பெற்றது தவறு என வைகோ ஏன் கண்டிக்கவில்லை.வைகோவுக்கு திமுக கூட்டணியில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கலாம், ஆனால், துரைக்கு மத்திய அமைச்சராக வேண்டும் என்ற விருப்பம் இருக்கும் காரணத்தாலேயே அவர் பாஜகவிடம் நெருக்கம் காட்டுகிறார். இது வெட்கக் கேடு, தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். அண்ணா பிறந்தநாள் மாநாட்டை நாங்கள் காஞ்சிபுரத்தில் நடத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்