Rock Fort Times
Online News

த.வெ.க.தலைவர் விஜயால் அதிமுகவுக்கு பாதிப்பா? *நடிகை கவுதமி பேட்டி…!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று(12-01-2026) விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்த அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான கவுதமி நேர்காணலில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பல வருடங்களாக என் மனதில் நெருக்கமாக உள்ள ஊர் ராஜபாளையம். அதனால் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காக விருப்ப மனு அளித்தேன். நல்ல முடிவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று நம்புகிறேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கான அத்தனை முயற்சிகளையும் நானும் செய்வேன். பல வருடங்களாக ராஜபாளையம் தொகுதி மக்களுடன் தொடர்ந்து இருந்து வருகிறேன். சினிமாவோ, அரசியலோ இரண்டுமே பொதுவாழ்வில் கடினமான பாதை தான். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல முயற்சி மேற்கொள்ளும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். அ.தி.மு.க.வின் வாக்குகளை விஜய்யால் அறுவடை செய்ய முடியாது. விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம். அவரது பயணம் தற்போது தான் தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்