பாராளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பதில் அளிக்காத பிரதமரை கண்டித்தும், அவருக்கு நினைவூட்டும் விதமாகவும் இந்திய தேசிய டிரேட்ஸ் யூனியன் காங்கிரஸ் (ஐ.என்.டி.யு.சி.) சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவூட்டும் தபால் அனுப்பும் போராட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. தமிழகம் முழுதும் நடைபெற உள்ள இந்த தபால் அனுப்பும் போராட்டமானது திருச்சியில் துவங்கியது. தமிழகம் முழுவதும் ஐ.என்.டி.யு.சி சார்பில் 5 லட்சம் தபால்கள் பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட உள்ளது. ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத்தலைவரும், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான தொட்டியம் சரவணன் தலைமையில் நடந்த தபால் அனுப்பும் போராட்டத்தில் மாநகர், மாவட்ட தலைவர் கே.எம்.சரவணன் வரவேற்றார். ஐ.என்.டி.யு.சி அகில இந்திய பொதுச் செயலாளர் அமீர்கான், ஐ.என்.டி.யு.சி. மாநிலத் தலைவர் தேவராஜன்,முதன்மை துணைத் தலைவர் ரகுராமன் ஆகியோர் தபால் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் , மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் எல்.வி.ரெக்ஸ், பொதுக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஜி மகேந்திரன், மாவட்ட துணை தலைவர் முரளி, கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், சிறுபான்மை பிரிவு அப்துல் குத்தூஸ் ஐ.என்.டி.யு சி .வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார், தெற்கு மாவட்ட ஐ.என்.டி.யு.சி தலைவர் புத்தூர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

