சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்:- திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்பு…!
சர்வதேச ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் ஆட்டிசம் குழந்தைகளின் வாழ்வின் தரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த இயன்ற முயற்சிகளை செய்வோம் என்ற உறுதிமொழியை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து ஆட்டிசம் குழந்தைகள் வாழ்வின் அடையாள குறியீட்டை வலியுறுத்தும் நிறமான நீல நிற பலூன்களை மாவட்ட கலெக்டர் பறக்கவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் இந்திய குழந்தைகள் நல குழுமத்தினர், சிறப்புப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், சிறப்பாசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.