Rock Fort Times
Online News

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் !

டெல்லி முதல்வர் அரவிந்த் கஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை முறையீடு வழக்கில், அமலாக்க துறையால் மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால். அமலாக்க துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமின் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார் கெஜ்ரிவால். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வில் நடைபெற்று வந்தது. தேர்தல் காரணமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவலுக்கு ஜாமீன் வழங்க பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. தேர்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று அமலாக்கத்துறை நேற்று புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், இன்று கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிபதிகள், ஜூன் 2ம் தேதி சரணடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.மேலும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தும் ஏன் ஒன்றரை ஆண்டுகளாக கைது செய்யவில்லை? எனவும்,தேர்தலுக்கு முன்பு அல்லது தேர்தல் முடிந்த பிறகு கூட கைது செய்திருக்கலாம் .தேர்தல் நேரத்தில் கைது செய்தால் என்ன மாற்றம் நடந்து விடப்போகிறது?எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்