நவம்பர் 2-ம் தேதி கல்லறை திருநாளை முன்னிட்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும்…* முதல்- அமைச்சருக்கு இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ கோரிக்கை!
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் தெரிவித்து இருப்பதாவது:-
கல்லறை திருநாள் என்பது உலகம் எங்கும் வாழும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வரும் ஒரு புனித நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான தகுதித் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. சிறுபான்மை இன மக்களை தொடர்ந்து பாதுகாத்து வரும் தாங்கள், கல்லறை திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தர வேண்டுகிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.