Rock Fort Times
Online News

இந்திரா கணேசன் கல்விக்குழுமங்களின் தலைவர் கணேசன் மனைவி காலமானார் !

திருச்சியில் புகழ்பெற்ற இந்திரா கணேசன் கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் திருச்சி ரமேஷ் எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளருமான டி.கணேசனின் துணைவியார் க. இந்திரா இன்று காலை                         ( 28-10-2023 ) காலமானார்.

அவரது இறுதி ஊர்வலம் நாளை (29-10-2023) காலை 10 மணி அளவில் திருச்சி தென்னூர் சீனிவாசபுரத்தில் உள்ள (இந்தி பிரசார சபா) அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

அம்மையாரது உடலுக்கு கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபார பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திருச்சியில் உள்ள பாரம்பரிய, மதிப்பும் மரியாதைமிக்க குடும்பங்களில் ஐயா டி.கணேசனின் குடும்பமும் ஒன்றாகும்.

காலம் சென்ற க.இந்திரா அம்மையாருக்கு உமா என்கிற மகளும், ராஜசேகரன், தாமோதரன், பாலகிருஷ்ணன் ஆகிய மகன்களும் உண்டு.
இதில் மூத்த மகனான ராஜசேகரன், இந்திரா கணேசன் கல்லூரியின் செயலாளராகவும், இளைய மகன் பாலகிருஷ்ணன் இயக்குனராகவும் உள்ளனர். நடுமகனான தாமோதரன் ரமேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் பொறுப்பையும் கவனித்து வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்