3டி பிரிண்டிங் மூலமாக கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம் பெங்களூருவில் அமைக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ( 18.08.2023 ) திறந்து வைத்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. அதுபோன்று 3டி தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட கட்டடத்தை கட்டுவது ஒரு சிறந்த முயற்சி என்றார்.
3டி பிரிண்டிங்கில் கட்டப்பட்ட தபால் நிலையம் தொடர்பாக பிரதமர் மோடி தெரிவிக்கையில்,’பெங்களூரு கேம்பிரிட்ஜ் லே அவுட்டில் இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் மூலமாக கட்டப்பட்ட தபால் நிலையத்தைப் பார்ப்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள். நமது தேசத்தின் கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு ஒரு சான்றாக, இது விளங்குகிறது. இதற்காக உழைத்தவர்களுக்கு பாராட்டுகள்’ என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.