Rock Fort Times
Online News

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்.3-ந்தேதி திருச்சி வருகை…* ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம்!

திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 3 ந்தேதி காலை நடைபெற உள்ளது. விழாவில், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 3-ந்தேதி காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் பகல் 12.30 மணியளவில் இறங்குகிறார். அங்கு மதிய உணவிற்கு பின்னர் 2.30 மணி முதல் 3.30 மணி வரை நடை பெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர், மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டு மெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வரும் ஜனாதிபதி, அங்கு அமைக்கப்படும் பிரத்யேக ஹெலிபேடு தளத்தில் இறங்குகிறார். பின்னர் காரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து காரில் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி இரண்டு மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்