Rock Fort Times
Online News

இந்திய அஞ்சலக வங்கியில் வியாபாரிகள் யு.பி.ஐ. மூலம் பணம் பெறும் வசதி அறிமுகம்…!

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவி தொகை கணக்குகள் மற்றும் அனைத்து விதமான அரசு மானியம், உதவி தொகை பெறும் கணக்குகளும் இதில் அடங்கும். இந்த வாடிக்கையாளர்கள் ‘கூகுள் ப்ளே ஸ்டோரில்’ செல்போன் வங்கி சேவைக்கான பிரத்யேக செயலி (ஆப்) மூலம் அஞ்சலக வங்கி கணக்குதாரர்கள் வாரிசு நியமனம், மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த செயலி, தபால்காரரின் உதவியுடன் வாடிக்கையாளர்கள் தங்களது அஞ்சலக வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அரசின் மானியத் தொகைகளை எளிதாகப் பெற முடியும். மேலும் வியாபார கணக்கு மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் ‘யு.பி.ஐ. ஸ்டிக்கர்’ அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்