திருச்சிக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவது அதிகரிப்பு: 2 நாளில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…!
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இன்று(24-10-2024) திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணியை தனியாக அழைத்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் அந்த நபர் ரூ.21.43 லட்சம் மதிப்பிலான 292 கிராம் தங்கத்தை தன் உடையில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல நேற்றைய தினம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணி ஒருவர் கடத்தி வந்த ரூ13.88 லட்சம் மதிப்பிலான 129 கிராம் தங்கம் மற்றும் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானத்தில் மற்றொரு பயணி கடத்தி வந்த ரூ.9.7 லட்சம் மதிப்பிலான 117 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சமீப நாட்களாக திருச்சிக்கு விமானத்தில் வருபவர்கள் தங்கம் கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
Comments are closed.