தஞ்சாவூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொது செயலாளராகவும் இருந்து வருபவர் ரெங்கசாமி. இவரது வீடு தஞ்சாவூர் அருகேயுள்ள தளவாய் பாளையத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையிலான 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இவரது வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ ரங்கசாமி சென்னையில் உள்ள நிலையில், அவரது மகன் மட்டுமே தஞ்சாவூர் இல்லத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை அறிந்த இவரது ஆதரவாளர்கள், வீட்டின் முன்பு குவிய தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இவர் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
Comments are closed.