தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று ( 03.08.2023 ) சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், கரூரில் உள்ள தொழிலதிபர் வீடு, அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய துணை ராணுவ வீரர்களின் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்துபாலன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.