திருச்சியில் சம்பவம் – கிறிஸ்தவ ஆலயத்தில் லிப்ட்டில் சிக்கி கொண்ட பெண்கள் தீயணைப்பு துறையினர் மீட்டனர்
திருச்சி மேலப்புதூர் கல்லுக்குழி பாலம் பகுதியில் டி.இ.எல்.சி. கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பிரார்த்தனை கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த கர்ப்பிணி பெண் உட்பட 5 பெண்கள் தரைத்தளத்தில் உள்ள உள்ள லிப்ட்டில் ஏறினர். அப்பொழுது திடீரென்று லிப்ட் பழுதாகி பாதியிலேயே பாதியில் நின்று விட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பிறகு உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லிப்ட்டில் சிக்கிக் கொண்டிருந்த ஐந்து பேரையும் சுமார் 1/2 மணிநேரம் போராடி பாதுகாப்பாக மீட்டனர். இது பற்றி தீயணைப்பு படை வீரர்கள் கூறும்போது மின்தடை காரணமாக லிப்ட் இயக்கம் தடைபட்டது. அப்போது ஜெனரேட்டரை இயக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது இயங்கவில்லை. இந்த நிலையில் லிப்டில் சிக்கி இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்ததும் உதவி மாவட்ட அலுவலர் சத்திய வர்த்தனன் தலைமையில் விரைந்து சென்றோம் பின்னர் ஹைட்ராலிக் ஸ்பிளட்டர் கருவி மூலம் அவர்களை மீட்டோம் என்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.