Rock Fort Times
Online News

30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை : காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் தகவல்!

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் சொத்துவரி செலுத்துவோர் 2023 -2024ம் ஆண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தெரிவித்துள்ளார். தமிழக அரசு உத்தரவின்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் செயலாளர் உத்தரவின்படி காட்டுப்புத்தூர் பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூல் வசூலிப்பாளர்கபளிடமும் , பேரூராட்சி அலுவலக கணினி மையத்தில் ரொக்கமாகவும், வங்கி காசோலை மற்றும் வங்கி கேட்பு வரைவோலையாகவும் செலுத்தலாம். டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமைதாரர்கள் தங்களது சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்