Rock Fort Times
Online News

திருச்சியில் சாத்விகா கட்டிடக்கலை நிறுவனம் திறப்பு விழா…

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தார்...

திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் அருகில் சாத்விகா கட்டிடக்கலை நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர்     வி. கோவிந்தராஜுலு கலந்து கொண்டு சாத்விகா கட்டிடக்கலை நிறுவனத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், மாவட்ட செயலாளர் செந்தில் பாலு, மாவட்ட பொருளாளர் தங்கராஜ், மாநகர பொருளாளர் ஏ.பி.ஆறுமுக பெருமாள் மற்றும் தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக சாத்விகா கட்டிடக்கலை நிறுவனர் எஸ். ஸ்ரீநாத் அனைவரையும் வரவேற்றார். சாத்விகா கட்டிடக்கலை நிறுவனம்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதரின் மகன் ஸ்ரீநாத்துடையது  என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்