திருச்சியில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை கட்டிடம் திறப்பு…
அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்...

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாசலபுரத்தில் ரூபாய் 41.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ( 03.11.2023 ) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் . மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் , துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ் குமார், ஊராட்சி உதவி இயக்குநர் கங்கா தாரணி, ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.