மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு திருச்சியில் ஜன. 4 மற்றும் 5-ம் தேதி ட்ரோன்கள் பறக்கத் தடை…!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் வே.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (04.01.2026), நாளை மறுநாள் (05.01.2026) ஆகிய இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதன் காரணமாக திருச்சி மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடக் கூடாது. இந்த உத்தரவை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.