Rock Fort Times
Online News

திருச்சியில் நாளை(பிப்.21) நாம் தமிழர் கட்சி மாநில மாநாடு…117 ஆண் மற்றும் 117 பெண் வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் சீமான்!

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 2016ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, அதன்பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து நடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58 ஆக உயர்ந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8.2 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. இந்தநிலையில், திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை அக்கட்சி நடத்துகிறது. திருச்சி- திண்டுக்கல் சாலை அருகே அமைந்துள்ள ஆலம்பட்டிபுதூரில் நாளை(21-02-2026) நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற வேட்பாளர்களையும் அறிவிக்கிறார். அவர்களில் 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்களும் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்