திருச்சியில் நாளை மறுநாள் மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்கிறார்..
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ.ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடக்கிறது. கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு .
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.