சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இன்று(20-01-2026) விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை மாநகர காவல் ஆணையர் ந.காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோர்ட் ரவுண்டானா, முத்தரையர் சிலை, தலைமை தபால் நிலையத்தில் ஊர்வலம் நிறைவு பெற்றது. இதில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.