திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில், கட்ட பஞ்சாயத்து செய்து நிலத்தை அபகரித்தவர்கள், போதைப் பொருள் விற்பவர்கள், கள்ளத்தனமாக மது, லாட்டரி விற்பவர்கள் என குற்ற செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், கல்லாங்குத்து ரயில்வே கேட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு
இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் கஞ்சா விற்பனை செய்ய நின்றது தெரிய வந்தது. இதனைக் கேட்டு திகைப்படைந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். மேலும், துவாக்குடி மாரியம்மன் கோவில் தெரு செடிமலை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் கீழக் குமரேசபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என 2 பேரை கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.