திருச்சியில் யோகா பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு: மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கைவரிசை…!
திருச்சி, ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்த 64 வயது பெண் ஒருவர், யோகா மாஸ்டர் மல்லிகா என்பவருடன் சண்முகா நகர் 11வது கிராஸ் பகுதியில் நடைபெறும் யோகா பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். ரங்கா நகர் 7-வது கிராஸ் பகுதியில் சென்றபோது இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில், 64 வயதுடைய பெண் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். மல்லிகாவும், அந்த பெண்ணும் திருடன்…திருடன்… என கத்தினர். இருந்தபோதிலும் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.