திருச்சியில், அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி…!
தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தொடங்கி வைத்தார்
அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்களுக்கு கழக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி செந்தண்ணீர்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பகுதி செயலாளர் தண்டபாணி ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் கலந்து கொண்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 லட்சம் புதிய உறுப்பினர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கழக துணை செயலாளர் சுபத்ராதேவி சுப்பிரமணியன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் பி.சாந்தி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம். சுரேஷ்குமார், மாநகர் மாவட்ட முன்னாள் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எ.முத்துக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம். பிரசன்னகுமார், மீசை ஏ.ஆறுமுகம், எம். ஆனந்த கிருஷ்ணன் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.