திருச்சி மாநகர பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில டாஸ்மாக் கடைகளில் பார் வசதியும் உள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.
ஆனால், திருச்சி மாநகரில் உள்ள மதுபான கடைகளில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மதுபானம் விற்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.கே.திலிப்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மீண்டும் மனு கொடுக்கப்பட்டது.
அப்போது மாவட்ட அமைப்பு செயலாளர் வி.எழிலரசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.கே.ஜே. ரபிக், திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர் பா.செந்தில்குமார், மாவட்ட பொறுப்பாளர் பி.கே.ஆனந்த், மலைக்கோட்டை பகுதி செயலாளர் வீரமணி, மலைக்கோட்டை பகுதி அமைப்புச் செயலாளர் செந்தில்குமார், தாராநல்லூர் பகுதி தினேஷ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.