Rock Fort Times
Online News

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்… * திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி!

திருச்சிக்கு வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக வை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் அ.ம.மு.க பெயரை குறிப்பிடாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் சட்டம்- ஒழுங்கு கெட்டு தான் போகும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக வை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது கூட்டு மந்திர சபை தான் அமையும். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அதிகாரம் பெறும் வகையில் மக்கள் முடிவெடுப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமித்ஷாவிடம் தான் கேட்க வேண்டும். தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நாங்கள் நேரம் கேட்கவில்லை. எங்கள் கூட்டணி மேலும் வலுவடையும். கூட்டணி வலுவடைவதை பார்த்து திமுகவினருக்கு அச்சம் வந்து விட்டது. அன்வர் ராஜா எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் பயணித்தவர். அவர் திமுகவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில தனி நபர் வருமானம் உயர்ந்ததற்கு காரணம் இந்தியா முழுவதும் நிகழ்ந்த வளர்ச்சி தான் என்றார். பேட்டியின்போது ‌அ.ம.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்