திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு…! * அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்!
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, வேட்டி, சேலை மற்றும் ரொக்கமாக ரூ.3000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (ஜன. 8) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதேபோல திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்த்தோப்பு பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.