உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டி உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அதேபோல ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மன்னராக முடிசூடினார். ஆகவே பிறந்தநாளையும், முடிசூடிய நாளையும் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா ஐப்பசி மாதம் இன்று(9-11-2024) காலை 8.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கமும், வரலாறாக வாழும் மாமன்னன் ராஜராஜன் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடந்தது. தொடர்ந்து நாதசுரம், பரதநாட்டியம், யாழ்இசை, வில்லுப்பாட்டு, நாத சங்கமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 6 மணிக்கு பழங்கால இசைக்கருவிகளோடு நாட்டிய கலைஞர்கள் பங்குபெறும் மாமன்னன் ராஜராஜசோழன் விஜயம் என்ற மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு பன்முக ராஜராஜனை பாடுவோம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழனின் நிலைத்த பெரும் புகழுக்கு காரணம் அவரது நிர்வாகப் பணியா? கலைப் பணியா ? என்ற தலைப்பில் தமிழ்இனிமை பட்டிமன்றம் நடக்கிறது. பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் நடுவராக செயல்படுகிறார். இரவு 9.30 மணிக்கு நவீன தொழில்நுட்பத்தில் சதய நாயகன் ராஜராஜன் என்ற வரலாற்று நாடகம் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களுக்கு ராஜராஜ சோழன் விருது வழங்குகிறார்கள். சதய விழாவை முன்னிட்டு தஞ்சை நகரம் விழா கோலம் பூண்டுள்ளது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.