Rock Fort Times
Online News

நள்ளிரவில் காரை வழிமறித்து  வியாபாாியிடம் ரூ.3 லட்சம் பணம் கொள்ளை…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 43). மரம் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று நள்ளிரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு காரில் திருச்சியிலிருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முத்தபுடையான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது இரண்டு இரு சக்கர வாகனத்தில் நின்ற நான்கு மர்ம நபர்கள் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். போலீஸ் எனக்கூறி காரை சோதனையிடுவது போல் காரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாரதி இதுதொடர்பாக மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்