கரூர் மாவட்டம், தாந்தோணி வட்டத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று( மார்ச் 14) மாலை கல்லூரி முடிந்து கல்லூரி பேருந்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். வெள்ளியணை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை அந்தப் பேருந்து கடக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. அப்போது அந்த தண்டவாளத்தில் தனியார் சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி கற்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கல்லூரி பேருந்து மீது அந்த சரக்கு ரயில் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 18 கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.