Rock Fort Times
Online News

திருச்சி, கம்பரசம் பேட்டையில் ரூ.63.70 கோடியில் கட்டப்பட்ட தலைமை நீரேற்று நிலையம்…* அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!

திருச்சி, மாவட்டத்திற்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.63.70 கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றுப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜன.7) திறந்து வைத்தார். பின்னர் அந்த நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் முழுவதையும் பார்வையிட்டார். இந்த புதிய குடிநீர் திட்டத்தின் மூலம் கம்பரசம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சனை தீரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் லி.மதுபாலன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்