Rock Fort Times
Online News

கடலூரில் ஜன. 9-ம் தேதி தேமுதிக மாநாடு: கூட்டணி குறித்து முக்கிய முடிவை அறிவிக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழ் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க கூட்டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும், அதிமுகவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் ஜனவரி 9ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேமுதிக சார்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், ஒன்றியம், நகர, கிளை கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணிக்கும், தலைவரை உயிர் மூச்சாய் கொண்டுள்ள அனைத்து தொண்டர்களுக்கும், என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற ஜனவரி 9 – 2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூரின் பாசார் கிராமத்தில் நடக்க இருக்கிறது. நமது மாநாட்டை மிக பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தரவேண்டும். அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்