காவலர்கள் ஒவ்வொருவரும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும், போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களுடன் கூட்டு சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட கூடாது, ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவலர் மாற்றப்பட வேண்டும் என சென்னை வடக்கு காவல்துறை கூடுதல் ஆணையர் அஸ்ராகார்க் அண்மையில் தெரிவித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க தற்போது 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் உட்பட 14 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் 14 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.