Rock Fort Times
Online News

தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் சிறை தண்டனை…

தமிழக அரசு எச்சாிக்கை...

ஆன்லைனில் சிலா் சூதாடி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலமைக்கு தள்ளப்படுகின்றனா். ஆகவே தமிழகத்தில் ஆன்லைனில் சூதாட்டத்திற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி  தமிழ்நாடு இணையவழி சூதாட்ட  தடை ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை கடந்த மார்ச் 6-ந் தேதி தமிழக அரசுக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் 23-ந் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு மறுநாளே கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.இந்த சட்டத்தின்படி இணைய விளையாட்டில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5,000 அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இணைய வழி விளையாட்டுக்காக விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இதுபோன்ற விளையாட்டுகளை அளிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இவர்கள் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்