மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கோவையில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து இஸ்லாமியர்கள் பசித்திருந்து நோன்பு இருந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் அத்தர் ஜமாஅத் சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் – காவல்துறை உயர் அதிகாரிகள் – அரசு மருத்துவமனை டீன் – மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பல்சமய சமூக அமைப்புகள் பங்கேற்றனர் .

