திருச்சியில் அல் ஹிதாயத் சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் மதரஸா சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் மற்றும் ரம்ஜான் அன்பளிப்பு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திருச்சி அண்ணா சிலை தாஜ் கல்யாண மண்டபம் அருகில் நடந்த
நிகழ்ச்சிக்கு மௌலானா மௌலவி எம். முகமது அலி ஜின்னா மன்பஈ தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் ,புனித லூர்து அன்னை ஆலயம் அருள் தந்தை மரிவலன்சே.ச. பங்குத்தந்தை , திமுக பிரமுகர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பஜார் எ.மைதீன் செய்திருந்தார். அப்துல் சமது, வழக்குரைஞர் சையத் மதானி ,அப்துல் ரகுமான், அப்துல்லாஹ், நூரி ஹஜ்ரத் முகமது கனி ,சுலைமான், சகாபுதீன் ,அனஸ் ஜிம் விக்கி ஆசாத், பைட்டா ஆசிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
