Rock Fort Times
Online News

தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வாங்க… அண்ணாமலைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால்…!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும், உதயநிதிக்கும் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. கல்வி தொடர்புடையது. மத்திய அரசிடம் பேசி நிதி வாங்கித் தரமுடியவில்லை. இவரெல்லாம் சவால் விடுகிறார். வீட்டில் சுவரொட்டி ஒட்டுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயம் குறித்தும் ஏதேதோ பேசியிருக்கிறார். தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரட்டும். தனியார் பள்ளி நடத்துபவர்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற்றே நடத்துகிறார்கள். அவர்களை அண்ணாமலை விமர்சிப்பதே தவறு. மும்மொழிக் கொள்கை அரசுப் பள்ளி தொடர்புடையது. தனியார் பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதை இத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம். தமிழக விளையாட்டு வீரர்கள் வாரணாசி சென்றுவிட்டு, ரயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலால் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மகா கும்பமேளாவில் கூட்டத்தை சமாளிக்கத் தெரியாமல் உ.பி. பாஜக அரசும், மத்திய அரசும் திணறி வருகின்றன. எத்தனை பேர் கூட்ட நெரிசலில் பலியானார்கள், காயம் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை சொல்லுங்கள் பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்