Rock Fort Times
Online News

ரெயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் இனி கட்டணம்…- தெற்கு ரயில்வே அதிரடி…!

நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். சாப்பிடும் வசதி, கழிவறை வசதி என அனைத்து வசதிகளும் கிடைப்பதால் ரயில் பயணத்தை பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர். அப்போது அவர்கள் தங்களுடன் லக்கேஜ்களை அதிக அளவில் எடுத்துச் செல்கின்றனர். இனி அவ்வாறு கூடுதல் லக்கேஜ் எடுத்துச் சென்றால் அவற்றுக்கு கட்டணம் விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், ரயில்களில், ஏ.சி. முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையிலும், ஏ.சி. 2-ம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையிலும், ஏ.சி. 3-ம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையிலும், முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் மட்டுமே லக்கேஜ்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான லக்கேஜ் எடுத்து வரும் பயணிகளுக்கு ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும். இதனை டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிப்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்