விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது: மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்த பாஜ முயற்சிக்கிறது. அபாயகரமான கட்டத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. பா.ஜ. மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் இந்தியாவில் ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்து. தனி மனித சுதந்திரத்திற்கு ஆபத்து. பாஜக தற்போதைய தேர்தலில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐயுடன் கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்திக்கிறார்கள். எதிர்த்து பேசினால் உடனே வழக்கு பாயும். பாஜவில் இருப்பவர்கள் என்ன உத்தமர் காந்தியா?. தமிழகத்தில் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் அவர்கள் பேச்சு எப்படி இருக்கிறது? நாம் போட்ட பிச்சையால் தான் பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அனைத்து நிறுவனங்களையும் மிரட்டி வசூலிக்கிறார்கள். விழுப்புரத்தில் அண்ணாமலையின் யாத்திரைக்கு ஒரு கடை விடாமல் வசூலித்தார்கள். நண்பனாக பழகிய பாஜவும், நம்முடன் இருந்த துரோகிகளும் அதிமுகவை ஒழிக்க நினைத்தார்கள். அதை தகர்த்தெறிந்து எடப்பாடி நிலை நிறுத்தியுள்ளார். மழை, வெள்ளத்திற்கு வராத பிரதமர் மோடி தேர்தலுக்கு மட்டும் ரயில், கப்பல், விமானத்தில் வந்து செல்கிறார். மழை பாதிப்பிற்கு தமிழகம் கேட்ட நிதியை கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.