“எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை”…- தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு பேட்டி..!
வடசென்னையின் மூத்த அரசியல்வாதியும், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளருமான வி.எஸ்.பாபு, தனது நிர்வாகிகளுடன் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்; பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தின் வருங்கால முதல்வர் விஜய்யை சந்தித்ததில் உள்ளம் மகிழ்ந்தது, சிறப்பான மனிதரை இன்று சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை, அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்; நாட்டில் என்ன நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும், நல்ல ஆட்சி இல்லை, எதிர்க்கட்சியும் நல்ல எதிர்க்கட்சி இல்லை, அவர்களது செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் வருங்காலத்தை மீட்டெடுத்து ஆட்சியை செம்மையாக நடத்த, அருமையான தலைவரை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துள்ளது, அதற்கு துணையாக வடசென்னையில் என் உழைப்பும் இருக்க வேண்டும் என்று தவெகவில் இணைந்துள்ளேன்” என்றார்; அதிமுகவில் விருப்பமனு கொடுத்தாலும் நேர்காணலில் கலந்து கொள்ளவில்லை, “அவர்களின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை, கழகம் வளர்ச்சி அடைவதற்கான காரணமும் இல்லை, அவர்களால் கட்சியை நடத்து முடியவில்லை, நான் செய்யும் செயலுக்கு அவர்கள் ஒத்துவரவில்லை, அதனால் விலகி விட்டேன்” என்றும், “அதிமுகவை வழிநடத்தும் திறன் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை, அவரின் செயல்பாடுகள் சரியில்லை, கட்சியின் வளர்ச்சிக்கு சரியாக திட்டமிடவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.