மதங்களை கடந்த மனிதநேயம்..!- மும்மதத்தினருக்கும் தனது வீட்டில் இப்தார் விருந்தளித்த சமயபுரம் வி.எஸ்.பி இளங்கோவன் மகன்..!
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றாக ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நமது நாட்டில் பல்வேறு சமூக நலக்கூடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மும்மதத்தினரும் இணைந்து இப்தார் நோன்பை கடைபிடிப்பது வழக்கம். ஆனால் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஹிந்து, கிறிஸ்டியன் மற்றும் இஸ்லாம் என மும்மதத்தை சார்ந்தவர்களையும் தனது வீட்டிற்கு அழைத்து பிரம்மாண்டமான இப்தார் விருந்தளித்து அசத்தியுள்ளார் அசோக் ராஜா. இது அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. திருச்சி, சமயபுரம் மாரியம்மன் அறங்காவலர் குழுத்தலைவராக இருந்த வி.எஸ்.பி இளங்கோவனின் மகனான இவர், எதைச் செய்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக செய்யக்கூடியவர். ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களை செய்துவரும் அசோக் ராஜாவுக்கு மரங்கள் மற்றும் பறவைகள் வளர்ப்பதென்றால் அலாதி பிரியம். அதற்காகவே சமயபுரம் அருகே இவருக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் இடத்தில் பல்வேறு வகையான பறவைகளையும், அவற்றிற்கு உணவளிக்கும் விதத்தில் மா, கொய்யா போன்ற மரங்களையும் வளர்த்து வருகிறார். இதிலிருந்து அறுவடையாகும் அத்தனையும் பறவைகளுக்கே இரையாகிறது. எதையும் விற்பனை செய்வதில்லை. மேலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் ஒன்றிணைந்து ஏரி, குளங்களை சீரமைப்பது, மரம் நடுவது போன்ற பணிகளையும் இவர் செய்து வருகிறார். இவரது சமூக சேவைகளை பாராட்டி கடந்த 2023ம்ஆண்டு குடியரசு தினத்தன்று அப்போதைய திருச்சி மாவட்ட கலெக்டர் அசோக் ராஜாவுக்கு “பசுமைக்காவலர்” விருது வழங்கி பாராட்டியுள்ளார். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு மும்மதத்தை சார்ந்தவர்களையும் தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் ஃபிரை, மீன் வறுவல் போன்ற அசைவ உணவுகளை பரிமாறி இப்தார் விருந்தளித்து அமர்க்களப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அசோக் ராஜாவிடம் நாம் பேசினோம். அப்போது அவர் தெரிவித்ததாவது., “வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது நாட்டின் பலம். என்னதான் ஜாதி, இன, மத மொழியால் நாம் பிரிந்திருந்தாலும், மனிதம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்தவகையில் என்னுடன் பயணிக்கும் சக தொழில் முனைவோர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் ஆகியோரை ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் தினத்தன்று வீட்டிற்கு அழைத்து இப்தார் விருந்தளிப்பது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும் அவர்களுக்கு சிறப்பாக விருந்தளித்துள்ளோம். இது மனதிற்கு தன்நிறைவைத் தருகிறது” என்றார். நீங்களும் அசோக் ராஜாவின் இந்த மத நல்லிணக்க முயற்சியை பாராட்ட நினைத்தால் இதுதான் அவரது செல்போன் எண் : 89390 12345

Comments are closed.