Rock Fort Times
Online News

2026ம் ஆண்டில் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை: தீபாவளி எப்போது?- வெளியானது பட்டியல்!

2026ம் ஆண்டில் எந்த எந்த தேதியில் என்னென்ன பண்டிகைகள் வருகிறது. என்ன கிழமையில் விடுமுறை கிடைக்கவுள்ளது. என்பது தொடர்பாக பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 24 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு அரசு விடுமுறைகள்:

* ஜனவரி 1 – வியாழக்கிழமை- புத்தாண்டு

* ஜனவரி 15 – வியாழக்கிழமை- பொங்கல்

* ஜனவரி 16 – வெள்ளிக்கிழமை- திருவள்ளுவர் தினம்

* ஜனவரி 17 – சனிக்கிழமை- உழவர் திருநாள்

* ஜனவரி 26 – திங்கட்கிழமை- குடியரசு தினம்

* பிப்ரவரி 1 – ஞாயிற்றுக்கிழமை- தைப்பூசம்

* மார்ச் 19 – வியாழக்கிழமை- தெலுங்கு புத்தாண்டு

* மார்ச் 21 – சனிக்கிழமை- ரம்ஜான் பண்டிகை

* மார்ச் 31 – செவ்வாய்க்கிழமை- மகாவீர் ஜெயந்தி

* ஏப்ரல் 1 – புதன்கிழமை- வங்கி ஆண்டு கணக்கு முடிப்பு நாள்

* ஏப்ரல் 3 – வெள்ளிக்கிழமை- புனித வெள்ளி

* ஏப்ரல் 14 – செவ்வாய்க்கிழமை தமிழ்ப் புத்தாண்டு

* மே 1 – வெள்ளிக்கிழமை- மே தினம்

* மே 28 – வியாழக்கிழமை- பக்ரீத்

* ஜூன் 26 – வெள்ளிக்கிழமை – மொஹரம்

* ஆகஸ்ட் 15 – சனிக்கிழமை- சுதந்திர தினம்

* ஆகஸ்ட் 26 – புதன் கிழமை- மிலாது நபி

* செப்டம்பர் 4 – வெள்ளிக்கிழமை- கிருஷ்ண ஜெயந்தி

* செப்டம்பர் 14 – திங்கட்கிழமை- விநாயகர் சதுர்த்தி

* அக்டோபர் 2 – வெள்ளிக்கிழமை- காந்தி ஜெயந்தி

* அக்டோபர் 19 – திங்கட்கிழமை- ஆயுத பூஜை

* அக்டோபர் 20 – செவ்வாய்க்கிழமை- விஜயதசமி

* நவம்பர் 8 – ஞாயிற்றுக்கிழமை- தீபாவளி

* டிசம்பர் 25 – வெள்ளிக்கிழமை- கிறிஸ்துமஸ்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்