Rock Fort Times
Online News

அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? நயினார் நாகேந்திரன் பேட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அரசியல் களம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (09-01-26) சந்தித்துப் பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி பழனிசாமி இடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.கவுக்கு 56 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்பட்டது. அதனையே இன்றைய சந்திப்பில் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதிமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருக்கிறது. பிரதமர் மோடி தமிழக வருகையை ஒட்டி ஆலோசித்தோம். கூட்டம் சென்னையில் நடத்துவதா அல்லது மதுரையில் நடத்துவதா? என்பது குறித்து ஆலோசித்தோம். பிரதமர் இம்மாத இறுதியில் தமிழகம் வர இருக்கிறார். பா.ஜ.கவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை பின்னர் சொல்கிறேன்” என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்