புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதினால் எப்படி அறிவு வளரும்?- * கேட்கிறார், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி தமிழகம் முழுவதும் தாழ்தள பேருந்து வசதியை தொடங்கியுள்ளார்.
அந்தவகையில் திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து தாழ்தள பேருந்து வசதியை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வைத்தார். அதேபோல திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இன்று 3 தாழ்தள பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இந்த பேருந்தானது, ஸ்ரீரங்கத்தில் இருந்து விமான நிலையம் வரையிலும், பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் இருந்து துவாக்குடி வரையிலும், மற்றொரு பேருந்தானது சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கே.கே.நகர் வரை இயக்கப்படுகிறது. இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மண்டல 3-ன் குழு தலைவர் மு. மதிவாணன், திருச்சி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சதீஷ்குமார், மண்டல வணிகப்பிரிவு துணை மேலாளர் சுவாமிநாதன், துணை மேலாளர் தொழில்நுட்பம் புகழேந்தி ராஜ், கோட்ட மேலாளர் ராஜேந்திரன், டி.ஆர்.ஓ. ராஜலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பகுதி செயலாளர் மோகன், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி, வட்ட செயலாளர் சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் 9-ம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்ற புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு தொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவை எப்படி வளர்த்துக் கொள்ள முடியும்? என பதில் அளித்தார்.
Comments are closed.