Rock Fort Times
Online News

திருச்சி மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி? கலெக்டர் வே.சரவணன் விளக்கம்…!

பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனை திருச்சி மாவட்ட மக்கள் கூட்ட நெரிசல் இன்றி பெறுவது எப்படி? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் வே.சரவணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 2026-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரொக்க தொகை ரூ.3,000 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கிட தமிழ்நாடு அரசு சார்பில் ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தினைப் பொறுத்தவரை, நடைமுறையிலுள்ள 8,35,844 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 980 குடும்பங்கள் ஆக மொத்தம் 8,36,824 குடும்பங்களுக்கு 1,302 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பினை தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பெற ஏதுவாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன் இன்று நான்காம் தேதி முதல் வீடு, வீடாக சென்று வழங்கப்படும். அதில் இடம்பெற்றுள்ள நாள் மற்றும் நேரத்துக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்