திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி 13வது தெருவை சேர்ந்தவர் அப்துல் கபார். இவர் அதே பகுதியில் கறிக்கடை மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று தனது மனைவி இரண்டு மகள்கள் மற்றும் தாய் ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம நபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டியை தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் வீட்டின் மாடிக்கு சென்று தண்ணீர் டேங்க்கையும் உடைத்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு திடுகிட்டு எழுந்தனா். அப்போது மா்ம நபா்கள் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனா். இது குறித்து பொன்மலை காவல் நிலையத்தில் அப்துல் கபார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வீடு புகுந்து தீ வைத்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.