Rock Fort Times
Online News

இந்து சமய அறநிலையத்துறை ஓய்வு பெற்றோர் சங்க கூட்டம்…!

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஓய்வு பெற்றோர் சங்க திருச்சி மண்டல கூட்டம், துறையில் பணிபுரிந்த மற்றும் 75 ஆண்டுகள் நிறைவடைந்த 40 உறுப்பினர்களுக்கு மரியாதை செய்து கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி, மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் டி. ராஜப்பா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருவேங்கடம் ஏற்புரை ஆற்றினார். மகாலிங்கம் தலைமை உரையாற்றினார். இணைச் செயலாளர் ஜி.சம்பத்குமார் வரவேற்று பேசினார். பாரதி தொகுப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் என்.எல்.ஸ்ரீதரன், மாநில பொதுச் செயலாளர் ஞானசம்பந்தம், மாநில பொருளாளர் கணேசன், அனைத்து துறை அரசு ஓய்வூதிய சங்க மாநில செயலாளர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் மண்டலங்களின் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான அறிவிப்பை வெளியிட ஆணையரை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஓய்வு பெற்றோர் சங்கத்திற்கென இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் அலுவலகத்தில் அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக , 70 வயது நிரம்பிய 40 உறுப்பினர்களுக்கு சால்வை, மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் பத்மாசனி நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்