இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் திருச்சி மேலப்புதூர் பகுதியில் நடந்த விநாயகர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான். சில அரசியல் கட்சியினர் அது வேறு, இது வேறு என பொய் பிரசாரம் செய்கிறார்கள். அரசியல் கட்சிகள் சாதிகளை தூண்டிவிட்டு இந்துக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அரியலூர் மாவட்டம் வி. களத்தூர் பகுதியில் மாற்று மதத்தினர் அதிகம் வசிப்பதாக கூறி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெண்களை தாக்கி இருக்கிறார்கள். பெரம்பலூரிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. திமுக மந்திரிகள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார்கள். ஆனால், முதலமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்துக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் என்பதை முதல்வர் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட பொதுச் செயலாளர் மனோஜ் குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ், அரியமங்கலம் பகுதி பொறுப்பாளர் மாரி, கௌரி சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.