Rock Fort Times
Online News

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி…- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58,500 கன அடியாக அதிகரிப்பு..!

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 58,500 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 40,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்